என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பால் வியாபாரி தாக்குதல்"
பாகூர்:
பாகூர் அருகே குருவிநத்தம் மேற்கு வீதியை சேர்ந்தவர் மணி (வயது50). பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை பால் வியாபாரம் செய்து விட்டு மணி தூக்கு பாலம் வழியாக குருவிநத்ததுக்கு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக அதிகவேகமாக சென்ற கார் மணியின் மீது மோதும் வகையில் சென்றது.
உடனே, மணி அந்த காரில் சென்றவர்களிடம், ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என கேட்டார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த குருவிநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்த நடராஜ் (24), அவரது நண்பர் ரஞ்சித்(23) ஆகிய இருவரும், மணியை ஆபாசமாக திட்டி, உருட்டு கட்டையால் கொலைவெறிதாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் வீச்சரிவாளால் வெட்ட முயன்றனர்.
தகவலறிந்த பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசாரை கண்டதும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில், நடராஜை வீச்சரிவாளுடன் போலீசார் மடக்கி பிடித்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த மணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மணியின் சகோதரர் ராஜூ கொடுத்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து நடராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை வலை வீசி தேடி வருகின்றனர்.